கோவையில் விபச்சாரத்துக்கு அழைத்து மாட்டிக்கொண்ட புரோக்கர்கள் - சாதூரியமாக போலீசில் சிக்க வைத்த நண்பர்கள்..!

கோவை புதுப்பாளையம் அருகே விபச்சாரத்திற்கு அழைத்த புரோக்கர்களை, இளைஞர்கள் இருவர் சாதூர்யமாக போலீசில் சிக்க வைத்த நிலையில், அங்கிருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை பிரஸ் காலனி சாந்தி மேடு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கீரணத்தம் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கீரணத்தம், புதுப்பாளையம் அருகே ஒருவர் இவர்களது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி தனது பெயர் குணசேகரன் என்றும் என்னுடன் வந்தால் நீங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், உல்லாசமாக இருக்க ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் தந்தால் போதும் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நந்தகுமாரும் அவரது நண்பரும் குணசேகரன் சொன்ன முகவரியான எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரணத்தம் ஊராட்சி பகுதியில் லே அவுட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு 6 பெண்கள் மற்றும் 3 நபர்கள் இருந்துள்ளனர்.

இவர்கள் செய்யும் சட்டத்திற்கு புறம்பான செயல் குறித்து போலீசாரிடம் தெரிவிக்க திட்டமிட்ட நந்தகுமார் மற்றும் கிருஷ்ணகுமார், தங்களிடம் பணம் இல்லை ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியே வந்துள்ளனர்.

அப்போது, அங்கு கோவில்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பதை பார்த்து அவர்களிடம் இருவரும் தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவில்பாளையம் காவல்துறையினர் அவர்கள் சொன்ன வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது கோவை துடியலூர், சாய்பாபாகாலனி, நல்லாம்பாளையம், மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 6 பெண்களை வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஆறு பெண்களையும் மீட்ட போலீசார், அவர்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர், விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த குணசேகரன்(45), விஜயகுமார் (40), சுந்தராபுரத்தைச் சேர்ந்த முருகவேல் (30), ராஜபாளையத்தை சேர்ந்த மகேந்திரன்(28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இளைஞர்களை விபச்சாரத்துக்கு அழைத்து, போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட கும்பலை சேர்ந்த 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், பெண்களை இதுபோன்று தவறாக பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...