சசிகலா முதல்வராகக் கூடாது என்பதே தமிழக மக்களின் பிரார்த்தனையாக உள்ளது என லட்சிய தி.மு.க பொதுச்செயலாளர் டி.ராஜேந்தர் பேட்டி

கேரளா பவானி ஆற்றிலிருந்து 6 டி எம் சி தண்ணீர் மட்டும்தான் எடுக்க வேண்டும். ஆனால் பவானி ஆற்றின் குறுக்கே மஞ்சக்கண்டி மற்றும் தேக்குவட்டை இரண்டு இடங்களில் அணை கட்டியுள்ளதாகவும், பாடுவயலில் அணை கட்டுவதற்காக நிலத்தை சமப்படுத்தி ஆறு இடங்களில் கேரளா அரசு தடுப்பு அணை கட்டி 30 டி எம் சி வரை தண்ணீர் எடுக்க முயற்சிப்பதாகவும் லட்சியத் தி.மு.க பொதுச் செயலாளர் டி.ராஜேந்தர் குற்றஞ்சாட்டினார். 



மேலும், இதனை தடுக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி லட்சிய தி.மு.க.வின் சார்பாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லட்சிய தி.மு.க-வின் பொதுச்செயலாளர் டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், எம் எல் ஏ-க்கள் சிறைபிடிப்பு மற்றும் பேருந்தில் கூட்டிச்செல்வது நடந்துகொண்டு இருப்பதாகவும், அ.தி.மு.க.விற்கு வேண்டுமானால் சசிகலா பொதுச்செயலாளராக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டுக்கு முதல்வராக சசிகலா வரக்கூடாது என்பதே மக்களின் பிரார்த்தனையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சசிகலா முதல்வரானால் ஏலம் போட்டு தமிழ்நாடு விற்கப்பட்டுவிடும். மேலும் தி.மு.க.வில் ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு யாரும் பல்லக்கு தூக்கக்கூடாது என்பதில் லட்சிய தி.மு.க முனைப்பாகயிருப்பதாகவும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக யார் செயல்படுகிறார்கள் என்பதை பன்னீர்செல்வம்தான் சொல்ல வேண்டும்.

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தால் முதல்வர் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. சுப்பிரமணிய சுவாமி மீது சாணியை கரைத்து அ.தி.மு.க மகளிரணியினர் ஊற்றியபோதும் சசிகலா வர வேண்டும் என அவர் கூறுவது என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாதது போல் உள்ளது என டி.ராஜேந்தர் குற்றம் சாட்டினார்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...