கோவையில் உயர்ரக போதை பொருள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

பெ.நா.பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விகனேஷ் என்ற நபர் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.



கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க மாநகர மற்றும் மாவட்ட போலீசார வாகன சோதனை, இரவு ரோந்து என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தனிப்படை மற்றும் மதுவிலக்கு அமலாக்க போலீசார் உட்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் போதை பொருட்களுக்கு முற்றிலும் ஒழிக்க களமிறங்கியுள்ளனர்.

அதன்படி, கோவை புற நகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோவிந்த நாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.

அதனால், அந்த நபரை விசாரித்த போது அவர் கொண்டையம் பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்(26) என்று என்று தெரியவந்தது. பின்னர், அவரது உடமைகளை தணிக்கை செய்த போலீசார், விக்னேஷ் அதீத போதை ஏற்றக் கூடிய மெத்தபெட்டமைன் (Methamphetamine) என்ற உயர்ரக போதைப் பொருளான பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.



இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு அவர் வைத்திருந்த 5.25 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருட்கள் விற்பது அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செய்லோடுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...