ரயில் விபத்தில் யானைகள் உயிரிழப்பு: தடுப்பு நடவடிக்கையாக வாளையார் - மாவுத்தம்பதி இடையே பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்

கோவை அருகே ரயிலில் சிக்கி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக ரயில்வே துறை சார்பில் வாளையார் - மாவுத்தம்பதி இடையே பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை வழியாக கேரளாவிற்கு செல்லும் ரயில்கள் தமிழக கேரள எல்லை வனப்பகுதியான வாளையார், மாவுத்தம்பதி, எட்டிமடை உள்ளிட்ட பகுதிகளின் வழியாக வனத்துக்குள் கடந்து செல்ல வேண்டும்.

அந்த வனப்பகுதியில் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான காட்டு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டுப் பகுதியில் உள்ள யானைகள் வாளையாருக்கும், மாவுத்தம்பதிக்கும் இடையே உள்ள ரயில் பாதையை தொடர்ந்து கடந்து செல்லும் போது, அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூட அதே ரயில் பாதையில் தண்டவாளத்தை யானைகள் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தொடர்ந்து வனத்துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் இது குறித்து முறையிட்டு வந்த நிலையில், அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து அங்கு யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுக்க அங்கு பாலம் அமைக்க முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது வாளையாருக்கும் மாவுத்தம்பதிக்கும் இடையே பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று வனத்துக்குள் ரயில் பயணிக்கின்ற இடங்களில் பாலம் கட்டுதல் உள்ளிட்ட விபத்து தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என வன உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன விலங்குகள் ரயிலில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில், ரயில்வே துறையினர் பாலம் அமைத்து வருவதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...