திருப்பூரில் 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு - ஒருவர் கைது

திருப்பூர் எஸ்.வி காலனி அருகே நேற்றைய தினம் 5 சவரன் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆறுமுகத்தை சேலத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த எஸ்.வி காலனி மெயின் ரோடு, டி.எஸ்.ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்த முதியோர் தம்பதியான முத்துசாமி மற்றும் சந்திராமணி ஆகிய இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது மகன் இவர்களது வீட்டருகே கெமிக்கல் கம்பனி நடத்தி கொண்டு, கே.பி.என் காலனியில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மூதாட்டி சந்திராமணி அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து, அவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, 55 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகளை மூதாட்டியின் கணவரிடம் காட்டிய போது, அந்த மர்ம நபர், கடந்த சில நாட்களாக அவர்களுடன் பழகி வந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி ஆறுமுகத்தை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், குற்றவாளி ஆறுமுகம் சேலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வீட்டில் இருந்த ஆறுமுகத்தை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

மேலும், கொலைக்கான காரணம் என்ன? இந்த கொலை சம்பவத்தில் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...