கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் நடைபெற்ற வால்வ் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு

அவிநாசி சாலையில் சிஐஐ சார்பில் நடைபெற்ற வால்வ் தொழில்நுட்ப கருத்தரங்கில், இந்திய வால்வ் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பிரனை எஸ்.கார்க், சிஐஐ-யில், இயந்திர மனித பயன்பாடு, அறிவு சார்ந்த உற்பத்தி அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.



கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் வால்வ் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பிரசாந்த் சுப்பிரமணியன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். இதனை தொடர்ந்து பேசிய கருத்தரங்க தலைவர் ரமேஷ் பாபு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்த, இந்திய வால்வ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரனை எஸ்.கார்க் பேசியதாவது, மாறி வரும் காலம், தேவைகளுக்கு ஏற்ப உலக சந்தையில் சிறந்து விளங்கும் நோக்கில் இந்திய வால்வ் தொழில் நிறுவனங்களில் இயந்திர மனித பயன்பாடு அதிகரித்துள்ளது.

அறிவு சார்ந்த உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்த கருத்தரங்கில் பங்கேற்ற வல்லுநர்கள், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இறுதியாக சிஐஐ கோவை துணை தலைவர் செந்தில் கணேஷ் நன்றியுரையாற்றினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...