மீண்டும் பரவும் கொரோனா: கோவை விமான நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - அதிகாரிகள் தகவல்

பல்வேறு உலக நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல்.


கோவை: கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்து பிரிவுகளை சேர்த்து 23 விமானங்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இதனிடையே பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகின்றன.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில், கோவை விமான நிலையத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விமான நிலைய வளாகத்தில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து பிரிவில் பயணிக்க தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான உறுதி மொழி அடிப்படையில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களின் பேரில் பயண சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் பயணிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பயணிகளுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தன. மத்திய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவை தொடங்கியுள்ளன. இன்று அல்லது நாளை சுற்றறிக்கை வந்தபின் அதற்கேற்ப மீண்டும் பரிசோதனைகள் முன்பு போல் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...