நீலகிரி கோத்தகிரி அருகே மாநில நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு - 200 மீட்டருக்கு சிதறி கிடக்கும் பாறைகள்..!

கோத்தகிரி அடுத்த கூக்கல்தொரை கிராமத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிதறி கிடக்கும் பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் செல்ல உயிலட்டி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் உயிலட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக சாலையில் பாறைகள் மற்றும் மண் குவிந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த விவசாய நிலமும் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாற்றுப்பாதை வழியாக கோத்தகிரிக்கு சென்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



இதனிடையே மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலையில் குவிந்து கிடக்கும் பாறை மற்றும் மண் ஆகியவற்றை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று இரவு விதிகளை மீறி ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கால்வாய் பணி மேற்கொண்டதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...