கோவை சிங்காநல்லூர் அருகே வியாபாரியை மிரட்டி டிவி, ரூ.47,000 பணம் பறித்த காவலர் உட்பட இருவர் கைது..!

சிங்காநல்லூர் அருகே வியாபாரியை மிரட்டி 5 டிவிகள், கேஸ் அடுப்பு மற்றும் ரூ.47,000 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் மசக்காளிபாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் தாசிம் (26), இவர் டிவி மற்றும் கேஸ் அடுப்பு விற்பனை செய்து வருகிறார். நேற்று முன் தினம், அவர் தனது நண்பரான சாரூக் என்பவருடன் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் டிவி விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் என்பவர் தாசிமை போலியான டிவியை விற்பனை செய்கிறாயா? என மிரட்டி அவரிடமிருந்த டிவியை வாங்கியுள்ளார்.

மேலும் அவருடன் இருந்த சாரூக்கின் கைகளை கட்டி, அவரை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்று, அங்கிருந்த 5 டிவிகள், கேஸ் அடுப்பு மற்றும் ரூ.47,000 பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாசிம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவலர் ஒருவரே வியாபாரியை மிரட்டி டிவி, பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...