கோவையில் கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் மீட்பு - இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை

கோவை தெற்கு தாலுகா எல்லைக்குட்பட்ட, கோட்டைமேடு பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 4500 அடி பரப்பிலான வணிக கட்டிடத்தை நீதிமன்ற உத்தரவின்படி இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டுள்ளனர்.



கோவை: கோவை கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள வணிக கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று மீட்டனர்.



கோவை தெற்கு தாலுகா எல்லைக்குட்பட்ட, கோட்டைமேடு பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான வணிக கட்டடம், நீண்ட நாட்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.



கட்டிடத்தை மீட்க நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி தலைமையிலான அதிகாரிகள் இன்று கோவிலுக்கு சொந்தமான 4,500 சதுர அடி பரப்புள்ள வணிக கட்டிடத்தை மீட்டனர்.

இது குறித்து, தெரிவித்த அறநிலையத் துறை அதிகாரிகள், இந்த கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டிடம், நீண்ட நாட்களாக குத்தகைதாரர் அல்லாமல் மூன்றாம் நபரின் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது.



இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்குப்பின், அந்த வணிக கட்டடம் கோவிலின் கட்டுப்பாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்டுள்ள இந்த வணிக கட்டடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் 6 கோடி, என்றனர்.

இந்த நிலையில், கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியாரிடம் இருந்து மீட்ட இந்து சமய அறநிலையத் துறையிருக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...