உதகையில் துவங்கிய ஹோம் மேட் சாக்லேட் திருவிழா; சுற்றுலா பயணிகளை கவர்ந்த 180க்கும் மேற்பட்ட சாக்லேட் வகைகள்..!

ரோஸ் மேரி, தைம் சாக்லேட் பெப்பர் ஹனி சாக்லேட் உட்பட 187 வகையான சாக்லேட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஊட்டி YWCA அரங்கத்தில் நடைபெறும் சாக்லேட் திருவிழா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி பத்து நாட்கள் நடைபெற உள்ளது.



நீலகிரி: உதகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை வரவேற்கும் விதமாக ஹோம் மேட் சாக்லேட் திருவிழா தித்திப்புடன் தொடங்கியது.



நீலகிரி மாவட்டத்தில் ஐரோப்பியர்களின் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோம் மேட் சாக்லேட்டுகளுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.



பொதுவாக, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகப்படியாக வாங்கும் பொருளாக உதகை ஹோம் மேட் சாக்லேட்டுகள் உள்ளது என்றால் அது மிகையாகாது.



இந்நிலையில் உதகையில் "ஊட்டி 200" என்ற தலைப்பில் மெகா சாக்லேட் திருவிழா தொடங்கி உள்ளது.



தனியார் சாக்லெட் நிறுவனம் சார்பாக நடத்தப்படும் கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் விதமாக பாண்ஸ் ஆஃப் கீரின் டீ, மசாலா சாய் எனப்படும் சாக்லேட், ரோஸ் மேரி மற்றும் தைம் சாக்லேட் என மூலிகை பொருட்களை கொண்ட சாக்லேட்டுகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய டார்க் சாக்லேட், ஜிஞ்சர் பில்லிங் சாக்லேட், பெப்பர் ஹனி சாக்லேட் உட்பட 187 வகையான சாக்லேட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியின் மேலும் ஒரு சாதனைக்குரிய சிறப்பு அம்சமாக உதகை உருவாகி 200 வது ஆண்டை குறிக்கும் விதமாக 200 கிலோவில் 187 வகையான சாக்லேட்டுகள் இடம்பெற்றிருந்தன. இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்திருந்த நிலையில்,

இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தை சேர்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வு மேற்கொண்டதில், முதல் முறையாக நாட்டில் 180 வகையான டார்க் சாக்லேட்டு வகைகளை கண்காட்சிபடுத்தியது உதகையில் தான் என்பதை உறுதி செய்து, அதற்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை ஆசிய சாதனை புத்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக், கண்காட்சியை ஏற்பாடு செய்த தனியார் சாக்லேட் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களுக்கு வழங்கினார்.



உதகை YWCA அரங்கத்தில் இன்று துவங்கிய இந்த சாக்லேட் திருவிழா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி பத்து நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...