கோவை நவக்கரை அருகே விபத்து: கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் பலி..!

கேரளா மலப்புரம், மூர்க்கநாடு பகுதியை சேர்ந்த முகமது நாசில் (19) என்ற நர்சிங் மாணவர், நேற்று கோவைக்கு அவரது நண்பருடன் வந்து விட்டு, பைக்கில் மீண்டும் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த போது, கே.ஜி.சாவடி அருகே கார் மீது மோதியதில் உயிரிழந்தார்.


கோவை: கோவை நவக்கரை அருகே முன்னால் சென்ற காரின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் மலப்புரம், மூர்க்கநாடு பகுதியை சேர்ந்த வீரான்குட்டி என்பவரது மகன் முகமது நாசில் (19). இவர் பெங்கலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த முகமது நாசில் தனது நண்பரான முகமது பஜாஸ் (19) என்பருடன் தனது இரு சக்கர வாகனத்தில் கேரளாவில் இருந்து நேற்று கோவை வந்துள்ளார்.

பின்னர், மீண்டும் இருவரும் மாலை இரு சக்கர வாகனத்தில் கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கே.ஜி.சாவடி அடுத்த நவக்கரை அருகே முன்னால் சென்ற காரின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் காரின் பின் பகுதியில் பலமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட, முகமது நாசில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



படுகாயமடைந்த பஜாஸ், சுந்தராபுரம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...