கோவையில் உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்ற இருவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் - ஆட்சியர் உத்தரவு

உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் மெட்டாபேட்டமைன் (Methamphetamine) என்னும் உயர்ரக போதை பொருளை விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் அகமது (33) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே போல, அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சின்ன தடாகம், மடத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(33) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிஷோர் அகமது மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன்படி, காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்சியரின் உத்தரவுவின், அடிப்படையில் போதை பொருள் விற்பனை குற்றவாளிகளான கிஷோர் அகமது (33) மற்றும் கஞ்சா வழக்கு குற்றவாளியான சுரேஷ்குமார் (33) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

நடப்பாண்டில் போதை பொருள்கள் (கஞ்சா, Methamphetamine) விற்பனையாளர்கள் 9 நபர்கள் உட்பட மொத்தம் 37 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...