குடியரசு தினத்தன்று புதுதில்லியில் என்எஸ்எஸ் மாணவர் பேரணியில் பங்கேற்ற எஸ்என்ஆர் கல்லூரி மாணவருக்கு பாராட்டு


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி மாணவர் எஸ்.ராகுல் இவ்வாண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி புதுதில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் நடைபெற்ற குடியரசு தினவிழாப் பேரணியில் என்எஸ்எஸ் அணியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்கேற்று கல்லூரிக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும் மட்டுமின்றி பிறந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.



கோவை புலியகுளத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.ராகுல் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2015-யில் கோவை, எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரியில் பி.காம்.சி.ஏ இளநிலை படிப்பில் சேர்ந்த இம்மாணவர் சமூகசேவையில் மிகுந்த ஆர்வம்கொண்டு என்எஸ்எஸ்-இல் இணைந்து சிறப்பாக செயல்பட்டார்.



மேலும், கல்லூரியில் நடைபெறும் என்எஸ்எஸ் பேரணிக்கான சிறப்புப் பயிற்சியில் மிகக்கடுமையாக பயிற்சிபெற்றார். 

தொடர்ந்து, பாரதியார் பல்கலைக் கழகத்தின் சார்பில் புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கான தேர்வில் ஏறத்தாழ 130 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் தேர்வான 3 மாணவர்களுள் ஒருவராக எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி மாணவர் எஸ்.ராகுல் தேர்ச்சி பெற்று, பின் புதுதில்லியில் ஜனவரி 1 முதல் 31 வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சிறப்பு பயிற்சிகள் பெற்றார்.



இவரது இடைவிடாத முயற்சியின் பலனாக 2017-ஆம் ஆண்டின் புதுதில்லி குடியரசு தினவிழா பேரணியில் பாரதியார் பல்கலைக்கழத்தின் மாணவர் பிரதிநிதியாக பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

மாணவரின் இச்சாதனைக்கு கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், என்எஸ்எஸ் கல்லூரி திட்ட அலுவலர்கள், பெற்றோர்கள் அனைவரும் பக்கபலமாய் இருந்ததோடு வாழ்த்துகளையும் வழங்கியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...