உங்கள் விருப்பத்தை மீறி எந்த திட்டமும் கொண்டு வரப்படாது என்கிற உத்திரவாதத்தை நான் அளிக்கிறேன் - சூலூர் விவசாயிகளிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி

சூலூர் வாரப்பட்டியில் பாதுகாப்பு தொழில் கூடம் அமைக்க விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாய பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டியில் பாதுகாப்பு தொழில் கூடம் அமைக்க விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.



இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் போராட்ட குழுவினர் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,



திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், விவசாயிகள் மத்தியில் தங்கள் நிலம் பறிபோய் விடுமோ, காற்று மற்றும் நீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வந்து விடுமோ என அச்சம் எழுந்ததுள்ளது.

தனியார் கம்பெனி நிலங்கள் மட்டுமே தொழில் பூங்கா அமைக்க எடுக்கப்படும், விவசாயிகளின் விருப்பத்தை மீறி எந்த திட்டமும் கொண்டு வரப்படாது என்கிற உத்திரவாதத்தை நான் அளிக்கிறேன்.

விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் கேட்கின்ற விலைக்கு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும். தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கும் விவசாயிகள் ஒத்துக் கொள்ளும் விலைக்கு மட்டுமே நிலம் எடுக்கப்படும்.

அதுவரை எந்த கட்டாயமும் இல்லை. அங்கு நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தும் எந்த தொழிற்சாலைக்கும் அனுமதி வழங்கப்படாது. ஆழியார் குடிநீர் திட்டத்திற்கு விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்த போது, அந்தத் திட்டத்தை ரத்து செய்து மாற்று திட்டத்தை அறிவித்தார் முதல்வர்.

எனவே விவசாயிகளின் நலனுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது. இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இதை விவசாயிகளிடம் விளக்கியபோது அவர்களும் வரவேற்றார்கள். போராடுகின்ற விவசாயிகள் இதை புரிந்து கொண்டு போராட்டங்களை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...