முதுமலை புலிகள் காப்பகத்தில் முதல்முறையாக பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் வனத்துறையினர் இணைந்து முதல் முறையாக நடத்தும் 2 நாள் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணியில், 15 குழுக்கள் பங்கேற்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் என பல்வேறு வன விலங்குகள் இங்கு இருக்கும் நிலையில் வல்சர் எனப்படும் பிணம் தின்னி கழுகுகள், ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி பறவை, மீன் கொத்தி, மரங்கொத்தி, பச்சை கிளி என 200-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளும் உள்ளன.



அவற்றுடன் பல வகையான வண்ணத்துப் பூச்சிகளும் இருக்கும் நிலையில் முதல் முறையாக வண்ணத்து பூச்சிகளை கணக்கெடுக்கும் பணி இன்று காலை முதல் தொடங்கப்பட்டு உள்ளது.



இயற்கை மற்றும் பட்டாம்பூச்சிகள் அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



சுமார் 15 குழுக்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 328 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 250 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பதாகவும் முதுமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக முதுமலை வனப்பகுதி என்பது தமிழக, கர்நாடக மற்றும் கேரளா வனப்பகுதியோடு ஒட்டியுள்ளதால் புதிய வகை பட்டாம்பூச்சிகள் இங்கு இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.



இன்று தொடங்கியுள்ள இந்த கணக்கெடுப்பு பணி நாளை மாலை வரை நடைபெறும் என்பதால், அதன் பின்னர் தான் முதுமலையில் எந்த வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன என்பது தெரிய வரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் வித்யா மற்றும் தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...