திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஹிந்தியில் வைக்கப்பட்ட ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ பேனரால் பரபரப்பு

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்துள்ளதாக கூறப்படும் சூழலில் வேலைக்கு ஆள் தேவை என ஹிந்தியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால், தமிழக பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஹிந்தியில் அச்சடிக்கப்பட்ட‘வேலைக்கு ஆட்கள் தேவை’ பேனர் வைக்கப்பட்டுள்ளதால், தமிழக பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர அளவிலான ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்து வேலை இல்லை என பரவலாக கூறப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என ஹிந்தி மொழியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மொழியில் மட்டும் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த பேனரில் வேலைக்கு ஆள் வேண்டும் என்றும், நூற்பாலை, டையிங், காம்பேக்டிங், எம்பிராய்டரி, கோழி பண்ணை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பத்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என தொடர்பு எண்ணுடன் பெரிய அளவில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி மொழியில் மட்டுமே இந்த பேனர் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதால், தமிழக தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...