திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கணேசன் - ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் ஆய்வு செய்தபோது, கழிவறையை முறையாக பராமரிக்காத மருத்துவமனை ஊழியர்களை எச்சரிக்கை விடுத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட உள்ள வேலை வாய்ப்பு முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக திருப்பூருக்கு வருகை தந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, தொழிலாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா மற்றும் வரும் தொழிலாளர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



மேலும் கோப்புகளை ஆய்வு செய்த அவர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சரின் வருகையின் போது மருத்துவமனை வளாகத்தில் கழிவறை உள்ளிட்டவை சுத்தம் செய்யப்படாமல் இருந்துள்ளது.



இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் கணேசன், மருத்துவமனை ஊழியர்களிடம் இதுபோன்றுதான் எப்போதும் வைத்திருப்பீர்களா உங்களை சஸ்பெண்ட் செய்ய சொல்லவா என எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து பூலுவபட்டியில் விரிவாக்கப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளையும் தொழிற்கல்வி நிறுவனத்தையும் அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...