கோவை கார் வெடிப்பு வழக்கு: உக்கடம், கரும்புக்கடை பகுதியில் உள்ள கைதானவர்களின் வீடுகளில் தேசிய முகமை அதிகாரிகள் அதிரடி ரெய்டு..!

உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, ஜி எம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கைதனவர்களின் ஐந்து பேரின் வீடுகளில் தற்பொழுது 5 குழுக்களாக என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜமீஷா மூபின் என்பவர் பலியான நிலையில், வழக்கில் கைதானவர்களின் வீடுகளில் இன்று தேசிய முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, வழக்கு தமிழ்நாடு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிரவாத அமைப்புகளுடன் கைதானவர்களுக்கு உள்ள தொடர்பு மற்றும் தீவிரவாத சதித்திட்டம் தீட்டியது தெரியவந்ததையடுத்து, விசாரணை என் ஐ ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை தேசிய முகமை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அவ்வப்போது அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கில் கைதானவர்கள் வீடுகளில் தேசிய முகமை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம், இவ்வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் பெரோஸ் கான், உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகிய ஐந்து பேரை மட்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்றிரவு கோவை அழைத்து வந்தனர்.

தற்பொழுது, உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, ஜி எம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்த ஐந்து பேரின் வீடுகளில் என்.ஐ. ஏ அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய முகமை அதிகாரிகளின் ரெய்டு உக்கடம், கோட்டைமெடு பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, நேற்று ஐந்து பேரின் வீடுகளுக்கு அழைத்து சென்று என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பின்னர், அவர்களை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...