கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் நாச்சிபாளையம் அடுத்த கருஞ்சாமிகவுண்டபாளையம் பகுதியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் விழாவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள கருஞ்சாமிகவுண்ட பாளையம் கிராமத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில், கிளை தலைவர் குமார் கொடியேற்றினார்.



இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் கோவை தெற்கு மாவட்டத்துணை தலைவர் அப்பு(எ) கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் PT மோகன்ராஜ், மாவட்ட விவசாயி துணை தலைவர் ரவீந்திரன், ஒன்றிய தலைவர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சதீஸ் (எ) பாலா மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...