திருப்பூரில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் குறித்து அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

2023-ல் நடைபெறவுள்ள மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், இதற்கு அரசு அதிகாரிகள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது, திருப்பூரில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் நடைபெறும்.

இதற்கு அனைத்து அரசு துறை அலுவலர்களும் முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கு முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அலுவலகங்களிலும் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வேலைவாய்ப்பு முகாம் சார்பில் பயிற்சி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கான வகுப்பில் மாணவர்களை சந்தித்தார்.



அப்போது அவர், ஒன்றிய அரசின் பணியிடங்களில் மூன்று சதவீத தமிழர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர், அதனை உயர்த்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரக்கூடிய சூழ்நிலையில் மாணவ மாணவிகளும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அரசின் சலுகைகளை பயன்படுத்தி ஒன்றிய அரசின் பணிகளுக்கு தகுதியானவர்களாக தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...