கோவை ராம்நகர் மண்டல் பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக ராம் நகர் மண்டல் பகுதியில் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் அசோக் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான சிவசங்கரி கலந்து கொண்டார்.



இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...