உதகையில் நடைபெற்ற ‘மோற்ட்வர்த்’ திருவிழா - பாரம்பரிய உடையணிந்து தோடர் இன பழங்குடி மக்கள் உற்சாக நடனம்..!

உதகையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மந்து பகுதியில் பழங்குடியின மக்கள் நடத்திய ‘மோற்ட்வர்த்’ திருவிழாவில் தோடர் இன பழங்குடி மக்கள், பாரம்பரிய உடையணிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் தோடர் பழங்குடியின மக்கள் உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளை ஒட்டியுள்ள மந்து எனப்படும் 70 கிராமங்களில் வசித்து வருகின்றனர். தங்களுக்கென பாரம்பரிய உடை, தனி கலாச்சாரத்துடன் வாழ்ந்து வரும் இவர்கள் எருமைகளை வளர்த்து வருகின்றனர்.



இந்நிலையில், இவர்கள் ஆண்டுதோறும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்து பகுதியில் அவர்களது பாரம்பரிய கோவில்களான கூம்பு வடிவிலான முன்போ மற்றும் அரைவட்ட வடிவிலான அடையாள் வேல் கோவில்களில் மொற்ட்வர்த் எனப்படும் பாரம்பரிய விழாவை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.



இந்த நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 70-க்கும் மேற்பட்ட மந்துகளில் இருந்த வந்திருந்த தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.



அப்போது கூம்பு வடிவ முன்போ கோயிலில் கூடிய தோடர் இன மக்கள் ஒருவருக்கு ஒரு ரூபாய் வீதம் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். பின்பு அனைவரும் அரை வட்ட வடிவிலான அடையாள்வேல் கோவில் வந்து வழிபாடு நடத்தினர். இதனையடுத்து, இரண்டு கோவில்கள் முன்பு பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

இதனைதொடர்ந்து, இளைஞர்கள் தங்களது வலிமையை வெளிப்படுத்தும் விதமாக இளவட்ட கல்லை தூக்கி திறமையை வெளிப்படுத்தினர். தோடர் இன மக்கள் 1500 பேர் மட்டுமே வாழ்த்து வரும் நிலையில் தங்களது குலம் மற்றும் எருமைகள் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நன்மை பெற வேண்டி மொர்ட் வர்த் திருவிழாவை கொண்டாடி இறைவனை வழிபாடு நடத்தியது வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...