கோவை நீலாம்பூர் பகுதியில் அதிகாலை கோர விபத்து: காவல் ஆய்வாளரின் மகன் பரிதாபமாக பலி..!

இன்று அதிகாலை கரையம்பாளையம் ஜங்ஷன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கல் மீது கார் மோதியதில், காரில் பயணித்த ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.



கோவை நீலாம்பூர், கரையம்பாளையம் ஜங்ஷன் அருகே அதிகாலை நடந்த கோர விபத்தில், காவல் ஆய்வாளரின் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் முருகாசலம். இவர் மகன் கார்த்தி (18), அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இவரும், இவரது 17 வயதுடைய நண்பரும் நேற்று காரில் பயணத்திருக்கின்றனர். அப்போது, கார்த்தியின் நண்பர் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாலை கரையம்பாளையம் ஜங்ஷன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கல் மீது கார் மோதியது. இதில், காரில் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. மேலும், காரில் பயணித்த இருவரும் படுகாயம் அடைத்தனர்.

இதில், காவல் அனையாளரின் மகனான கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் இருந்த கார்த்திக்கின் நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் எங்கிருந்து வந்தது? எதற்காக இங்கே அதிகாலை வேளையில் சென்றார்கள்? என விபத்தின் பின்னணி குறித்து போலீசார் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...