திருப்பூர் பல்லடம் அருகே விவசாயி மாயமான வழக்கில் திடீர் திருப்பம் - குடிபோதையில் அடித்துக் கொலை செய்த நண்பர்கள் இருவர் கைது..!

பல்லடம் அருகே சம்பத்குமார் என்ற விவசாயி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக குடிபோதையில் அவரது நண்பர்களே அவரை அடித்து கொலை செய்து கை, கால்களை கட்டி வாய்க்காலில் வீசியது விசாரணையில் அம்பலம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மந்திரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது மனைவி பரிமளா மற்றும் மகன் சம்பத்குமார்(42) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் சம்பத் குமாருக்கு திருமணம் ஆகாத நிலையில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் சம்பத்குமார் தனது நண்பர்கள் சிலருடன் கடந்த நவம்பர் மாதம் கேரளா மாநிலம் மூணாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர், கடந்த மாதம் 30 தேதி இரவு மீண்டும் கோட்டப்பாளையத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது.



இதனை அடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியோடு பல இடங்களில் தேடியும் சம்பத்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே இச்சம்பவம் குறித்து காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் சம்பத்குமாரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாயமான சம்பத்குமாரை காமநாயக்கன் பாளையம் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சம்பத்குமார் கோட்டப்பாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர் சிவசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு சம்பத்குமார் அவரது நண்பர்கள் சிவசுப்பிரமணியன் என்ற மொட்டுமணி மற்றும் அபிமன்யு ஆகியோர் சேர்ந்து மது அருந்தியதாகவும் தெரியவந்தது. இதில் அபிமன்யுவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் சிவசுப்பிரமணியம் என்ற மொட்டுமணி சம்பத்துக்குமாரிடம் 9000 கடன் வாங்கியதாகவும், அதைத் திருப்பி தராததால் சம்பத்குமார் சிவசுப்பிரமணியம் எக்செல் சூப்பர் பைக்கை எடுத்துச் சென்று விட்டதாக கூறினார்.

பின்னர் சிவசுப்பிரமணியம் ஆன்லைன் மூலமாக சம்பத்குமார் 9000 ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டு தனது பைக்கை திருப்பி கேட்கும் போது சம்பத்குமார் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த மாதம் 30 ஆம் தேதி மூவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது சம்பத்குமாரிடம் சிவசுப்பிரமணி பைக்கை திருப்பி கேட்ட போது வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் சிவசுப்பிரமணியம் அருகில் இருந்த கட்டையை எடுத்து சம்பத்குமாரின் தலையில் பலமாக தாக்கியதில் நிலை தடுமாறி விழுந்த சம்பத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிவசுப்பிரமணியம் மற்றும் அபிமன்யு சேர்ந்து சம்பத்குமார் கை கால்களை கட்டி அருகில் உள்ள பிஏபி வாய்க்கால் உடலை வீசியுள்ளனர்.

இதனை அடுத்து காமநாயக்கன் பாளையம் போலீசார் சம்பத்குமார் கொலை செய்த நண்பர்களான சிவசுப்பிரமணியம் மற்றும் அபிமன்யு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் சம்பத்குமார் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். விவசாயி சம்பத்குமாரை நண்பர்களை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...