ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி டேன் டீ தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வை டேன் டீ நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்கவில்லை என்றும், விருப்ப ஓய்வு பெற வலியுறுத்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்கு உட்பட்ட சின்கோனாவில் லாசன் தேயிலைத் தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில், இந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வை தமிழக அரசு டான் டீ நிர்வாகம் தங்களுக்கு வழங்காமல் உள்ளது. நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும்.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் லசான் தோட்டத்தில் வால்பாறை டிவிஷன் முழுவதும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்களை விருப்ப பணி ஓய்வு பெறவும் வலியுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் தொழிலாளர்கள் விருப்ப பணி ஓய்வை எழுத்து மூலமாக டான் டீ நிர்வாகத்திடம் கொடுத்துள்ளது. தாங்கள் வெளியேற வேண்டும் என்றால் இழப்பீடு தொகையாக 25 லட்சம் மற்றும் 3 சென்ட் இடமும் அந்த இடத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்பும் வேண்டும் என கேட்டிருந்தோம், ஆனால் டான் டீ நிர்வாகத்தினர் இது நாள் வரை தராமல் அலைக்கழிக்கிறது.

இதேசமயம் தற்போது வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் டான் டீ நிர்வாகம் அடிப்படை தேவைகளை கூட பராமரிக்காமல் இருந்து வருகிறது.

மேலும் தேயிலைகள் மண்டி கிடப்பதால் முட்புதர்களாக மாறி வருவதால், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. டான் டீ நிர்வாகம் தேயிலை தோட்டங்களை சீர் செய்து போதுமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி பாதுகாப்பாக பணி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கை மனுவை கருணை மனுவாக ஏற்றுக் கொண்டு உடனடியாக டான் டீ தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...