தந்தை பெரியார் நினைவு நாள்: கோவை அரசு மருத்துவமனைக்கு 100 பேர் உடல் தானம் செய்தனர்

தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் காட்டாறு இதழ் மற்றும் ஆதி தமிழர் பேரவை சார்பில் 100 பேர் தங்கள் உடலை இறப்புக்கு பின் தானமாக அளிப்பதாக ஒப்புதல் பத்திரத்தை அளித்தனர்.



கோவை: தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக காட்டாறு இதழ், மற்றும் ஆதி தமிழர் பேரவை சார்பில், திராவிடர் தளம் என்ற பெயரில், 100 பேர் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் விண்ணப்பத்தை கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.



ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், காட்டாறு வெளியீட்டை சேர்ந்த தாமரைக்கண்ணன், தோழர் அறக்கட்டளையை சேர்ந்த சாந்தகுமார், ஆதித்தமிழர் பேரவையின் பொதுசெயாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த ஒப்புதலை வழங்கினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ஒவ்வொருவரும் இறப்பிற்கு பின் எங்களது உடலை கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பயிற்சிக்காக வழங்கியுள்ளதால், இறந்த பிறகு எங்கள் உடல் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்.



முதல் கட்டமாக 100 நபர்கள் அளித்த ஒப்புதல்கள் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளோம், மேலும் பலர் உடல் தானம் செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...