கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சியின் 14வது நாளில், ஆயுத அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.



கோவை: தமிழகம் முழுவதும் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் அணிவகுப்பு, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெறுவது வழக்கம்.



இந்நிலையில் இந்த ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான நினைவூட்டல் பயிற்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக 14 ஆவது நாள் பயிற்சி இன்று காலை நடைபெற்றது.



இதில் ஆயுத அணிவகுப்பு, போராட்ட களங்களில் செய்யும் பணிகளின் ஒத்திகை போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியின் ஆண் மற்றும் பெண் என இருபாலர் காவலர்களும் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...