கோவை கிழக்கு மற்றும் வடக்கு மண்டலத்தில் சாலை புதுப்பித்தல் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கிழக்கு மற்றும் வடக்கு மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை புதுப்பித்தல் பணிகளை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரதாப், சாலையின் தரத்தை கண்டறிய மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் கிழக்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட‌ பகுதிகளில்‌ நடைபெற்று வரும் தார்‌ சாலை புதுப்பித்தல்‌ பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சாலையின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்ப உத்தரவிட்டார்.



கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌ 24வது வார்டுக்கு உட்பட்ட தண்ணீர்‌ பந்தல்‌ சாலை எஸ்‌-பெண்ட்‌ சந்திப்பு முதல்‌ கொடிசியா வரை உள்ள மத்திய பகுதியில்‌ SRP திட்டத்தின் கீழ்‌ ரூ.3.25 கோடி மதிப்பீட்டில்‌ தார் சாலை புதுப்பித்தல்‌ பணி நடைபெற்று வருவது குறித்தும்,



விளாங்குறிச்சி சாலையிலிருந்து கொடிசியா சாலை வரை திட்ட இணைப்பு சாலை அமைப்பது தொடர்பாக உரிய இடத்தை தோ்வு செய்வது குறித்தும்‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



அதனைத்தொடர்ந்து, தண்ணீர்‌ பந்தல்‌ சாலை எஸ்‌-பெண்ட்‌ பகுதியில்‌ நில அளவை செய்து, சாய்தள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உதவி நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.50க்கு உட்பட்ட அவிநாசி சாலை, நவஇந்தியா சாலை முதல்‌ ஹிந்துஸ்தான்‌ சந்திப்பு வரை 600 மீட்டர்‌ தொலைவிற்கு ரூ.98 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்ட தார்‌ சாலையை நேரில் ஆய்வு செய்த அவர், தார்‌ சாலையின்‌ தரத்தை, அதன்‌ மாதிரியை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



முன்னதாக, வடக்கு மண்டலம் வார்டு எண்‌.11-க்கு உட்பட்ட சரவணம்பட்டி, சிவானந்தபுரம்‌, வேலவன்‌ நகரில்‌ மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்தார்.



அப்போது, பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்கவும்‌, கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்‌ எனவும் தூய்மை பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்தும்‌ தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



இதனையடுத்து, அப்பகுதியில்‌ மாநகராட்சி கொசு ஓழிப்பு பணியாளர்கள்‌ வீடுவீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவதையும்‌, தேவையில்லாத பொருட்களை அகற்றும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை ஆய்வு செய்தார்.



பின்னர், பொது மக்கள்‌ தேக்கி வைத்துள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளதா என்பதையும்‌ ஆய்வு செய்யும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ முறையாக விநியோகிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்‌.



அதனைத் தொடர்ந்து, சரவணம்பட்டி, சிவானந்தபுரம்‌, வேலவன்‌ நகரில்‌ இணைப்பு சாலை அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள்‌ உள்ளதா என்பதை கண்டறிந்து, சாலை அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வுகளின்போது, வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினர்‌ பழனிசாமி என்கிற சிரவை சிவா, உதவி ஆணையர்கள்‌ மோகனசுந்தரி, முத்து ராமலிங்கம்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ செந்தில்பாஸ்கர்‌, சுந்தரராஜன்‌, உதவி நகரமைப்பு அலுவலா்கள்‌ விமலா, ஜெயலட்சுமி, சுகாதார அலுவலாகள்‌ ராதாகிருஷ்ணன்‌, குணசேகரன்‌, உதவிப்‌ பொறியாளா்கள்‌ உத்தமன்‌, சக்தியவல்‌, திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள்‌ லோகநாதன்‌, ஜெரால்டு சத்ய புனிதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...