ஒண்டிப்புதூர் அருகே கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக நள்ளிரவு தேவாலயத்திற்கு சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள அன்னை இந்திரா நகரில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை மற்றும் 25000 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 54). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 24-ந் தேதி நள்ளிரவு ஆனந்தகுமார் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அவர் வீட்டருகே உள்ள தேவாலயத்துக்கு செல்ல, வீட்டை பூட்டி விட்டு, சாவியை வீட்டின் முன்பு இருந்த இரும்பு கட்டிலில் மறைத்து வைத்து விட்டு புறப்பட்டார்.

இதனை நோட்டமிட்ட யாரோ ஒரு மர்ம நபர் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க செயின், 4 கிராம் கம்மல், 2 கிராம் மோதிரம் உள்பட 11 பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

பிரார்த்தனை முடிந்ததும், ஆனந்தகுமார் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

திருட்டு குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகைக் கடைக்காரர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...