கோவையில் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு - இளைஞர் கைது….!

சிறுமுகை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற வசந்தகுமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (63). இவரது மனைவி சரோஜா (59). இருவரும் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தை அறுத்துவிட்டு, வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

முதல் கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபர்களின் படங்களை போலீசார் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் பெயர் வசந்தகுமார் என்பதும் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வசந்தமாரை கைது செய்த போலீசார் அவர் கொள்ளை அடித்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...