கோவையில் அதிகரிக்கும் உயர்ரக போதைப்பொருள் புழக்கம்: மதுக்கரை பகுதியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் கைது

கேரளா மாநிலத்தை சேர்ந்த சபுராணி அரேனா நிகில் (23) என்பவர் உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (Methamphetamine) விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் இருந்து 54 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது கோவை மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று(26.12.2022) காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான தனியார் கல்லூரியின் அருகே உள்ள பேக்கரியின் பின்புறம் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்த போது, அந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த சபுராணி அரேனா நிகில் (23) என்பதும் அவர் போதை ஏற்றக்கூடிய உயர்ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (Methamphetamine) விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சபுராணி அரேனா நிகிலை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 54 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் 1.500 கிலோ கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, கடந்த வாரம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விகனேஷ் என்ற நபர் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவையில் தொடர்ந்து கஞ்சா மற்றும் உயர் ரக போதை பொருட்களின் புழக்கம் கண்டுபிடிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்க கூடாது என்றும் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

அவ்வாறு, தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...