தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலைகளை தமிழக அரசு எடுத்து நடத்திட வேண்டும் - கோவை ஆட்சியரிடம் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை மனு

மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகளை தமிழக அரசு எடுத்து நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 12 தொழிற்சங்கங்களின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



கோவை: நாடு முழுவதும் உள்ள என்டிசி தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்ட "சேவ் என்டிசி” இயக்கம், என் டி சி ஆலைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவை அடங்கும்.



இந்த நிலையில், 12 தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரின் கேம்ப் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

அப்போது இது குறித்து தெரிவித்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், நாடு முழுவதும் உள்ள 23 NTC ஆலைகளில், தமிழ்நாட்டில் கோவையில் 5 ஆலைகளும், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ஒரு ஆலையும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில் ஒரு ஆலையும் இயங்கி வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆலைகள் இயங்கிட தடை விதிக்கப்பட்டது.



பின்னர் மீண்டும் தொழிற்சாலைகளை இயக்கிட மத்திய மாநில அரசுகள் உத்தரவு வழங்கிய பிறகும், NTC- ஆலைகள் மட்டும் தொடர்ந்து மூடப்பட்டு கடந்த 31- மாதங்களாக தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை எம் பி சி தொழிலாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்திதமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தியிடம் 2 முறை மனு, துறை செயலாளர், NTC-CMD ஆகியோரை 4 முறை சந்தித்து மனு, சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் மனு அளித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.

எனவே, இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி அவர் மூலம் தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகளை தமிழக அரசு எடுத்து நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைக்கிறோம் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இனியும் தாமதிக்காமல், தமிழக அரசு விரைவாக தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகளை எடுத்து நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...