கோவை தனியார் நிறுவனத்திடம் நண்டு உரம் வாங்கி ரூ.82 லட்சம் மோசடி - பஞ்சாப் விரைந்த கோவை குற்றப்பிரிவு போலீசார் - ஒருவர் கைது….!

இருகூர் பகுதியில் உள்ள நண்டு ஓடுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.82 லட்சம் மதிப்பிலான உரங்களை வாங்கி ஏமாற்றிய பஞ்சாப்பை சேர்ந்த இருவரை போலீசார் தேடிவந்த நிலையில், ஒருவர் பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் இருகூர் அடுத்த அத்தப்பகவுண்டன்புதுரை சேர்ந்தவர் விக்ரம் சுதாகர் (45). இவர் நண்டு ஓடுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் உரங்களை நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், விக்ரம் சுதாகருக்கு பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அவரது நண்பரான திருநாவுக்கரசு மூலம் பட்டியாலாவை சேர்ந்த கரம்வீர் செர்கில் (25), பங்கஜ் மித்தல் (25) என்ற இருவரும் அறிமுகமாகியுள்ளனர்.

இவர்கள், பிரதர் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், தாங்கள் நண்டு உரம் வாங்கிக் கொள்வதாகவும் சுதாகரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரு தரப்பினரும் உரம் விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு பட்டியாலாவுக்கு ரூ.82 லட்சம் மதிப்பிலான இயற்கை நண்டு உரத்தை விக்ரம் சுதாகர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதற்கான தொகையை பட்டியாலா நிறுவனத்தினர் தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்த வந்துள்ளனர்.

இது குறித்து, பலமுறை கேட்டும் பணம் கிடைக்காத நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் சுதாகர் புகார் அளித்தார்.

வழக்கு தொடர்பாக, உதவி ஆணையாளர் பார்த்திபன் மேற்பார்வையில், ஆய்வாளர் ரேணுகாதேவி, உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உரத்தை வாங்கிக்கொண்டு பணத்தை தராமல் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்காக கோவை போலீசார் பஞ்சாப் மாநிலம் சென்றனர். அங்கு, உரம் வாங்கி மோசடி செய்த பங்கஜ் மித்தலை பட்டியாலா போலீசார் உதவியுடன் கைது செய்தனர். தற்போது, அவரை கோவை அழைத்து வந்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்கள் வாங்கிய ரூ.82 லட்சம் மதிப்பிலான நண்டு உரத்தை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

மோசடி செய்த மற்றொரு நபரான கரம் பீர் செர்கில் தலைமறைவாக உள்ள நிலையில், உரம் வாங்கி ரூ. 82 லட்சம் மோசடி தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...