தீவிரமடையும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி-க்கு சிபிசிஐடி தனிப்படை சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது, நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த முரளிக்கு, சிபிசிஐடி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் ஜனவரி மாதத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நீலகிரி: தமிழ்நாட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்களில் கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளை பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த, மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மறு விசாரணை நடைபெற்று வருகின்றன.

முன்னதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல், அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜ் உறவினர்கள், குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது.

மேலும், சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவரும், டிடிவி தினகரனின் நண்பருமான நாமக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில், நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் அழகுராஜ் உள்ளிட்டோரிடமும் தனிப்படை போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு வழக்கின் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இவ்வழக்கின் முக்கிய நபராக கொடநாடு சிசிடிவி ஆபரேட்டர் தினேஷிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, சிபிசிஐடி தனிப்படை போலீசார் கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற பொழுது, நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

முரளி தற்போது ஆந்திராவில் சிபிஐ காவல் பிரிவில் பணியாற்றி வருகிறார். சிபிஐ தலைமை அலுவலகம் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் முன்னாள் எஸ்.பி.முரளி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...