உருமாறிய கொரோனா பரவல் எதிரொலி: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆய்வு

கொரோனா பரவல் குறித்த மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கொரோனா முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் வினீத் நேரில் ஆய்வு.



திருப்பூர்: சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவிலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக கருத்துக்கள் பரவி வருகின்றன.

இதனிடையே டெல்லியில் பல்வேறு துறை வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி, தமிழக அரசும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொரோனா முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இதையடுத்து கொரோனா தொற்று பரிசோதனை, கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி படுக்கை வசதி அமைப்பது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் ஆகியோருடன் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு மையங்கள் திறக்கப்பட்டு நுழைவாயில்களில் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய தெர்மல் ஸ்கிரீனிங், 2% சதவீத பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யவும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது பரவிவரும் ஒமிக்ரான் மாறுபாடு பிஏ 5-ன் துணை வகையான பிஎப் 7 கொரோனா வைரஸ், இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது என்றும், முந்தைய ஓமிக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது என்ற போதிலும் இறப்பு விகிதம் மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பு விகிதம் மிக குறைவு என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...