ஜே.பி.நட்டாவின் தமிழக வருகை - நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் முழு கவனம் செலுத்த முடிவு என தகவல்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தமிழக வருகையின் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலின் முதல் நகர்வை பாஜக தொடங்கியுள்ள நிலையில், தென்னிந்தியாவில் முழு கவனம் செலுத்த உள்ளதாக தகவல்.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரச்சார களப் பணிகளை துவங்கி உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் மிகவும் முக்கியமாக பார்க்கக் கூடிய மாவட்டமாக கோவை உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்த போது கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கை ஓங்கியதால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் போட்டி சூடு பிடித்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினாலும், அதிமுக உட்கட்சி பிரச்சனையால் கூட்டணி முடிவுகளில் மாற்றம் வரலாம். அதே நேரத்தில் தேசிய கட்சியான பாஜக தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் கால்பதிக்க தீவிரம் காட்டி வருகிறது.

அதன் துவக்கமாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகம் வருகை தருகிறார். குறிப்பாக கோவை மாவட்டத்துக்கு வரும் ஜே.பி.நட்டா, மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு சேர்த்து நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் நால்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததுடன், மத்தியிலும் ஆட்சியில் இருந்தாலும், தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

இதனால் கடந்த ஜூலை மாதம் (operation South) என்னும் திட்டத்தை பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிமுகம் செய்திருந்தார். வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க. உள்ளது. அந்த அடிப்படையில் பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் இன்று கோவையில் நடைபெறும் கூட்டத்தில் ஜே.பி.நட்டா நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது பற்றியும், தேர்தல் பரப்புரைகளை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றியும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.

அதே வேலையில் பாஜக உட்கட்சி பிரச்சனைகள் குறித்து விவதிக்கபடலாம் எனக் கூறப்படுகிறது. அண்மையில் கோவை மாவட்டம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் மாநில தலைமை எந்த போராட்ட அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்திருந்தது உட் கட்சியில் சிறிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான தீர்வு காணப்பட்டு தேர்தல் வியூகத்தை வகுக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...