உதகையில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள் - தாவரவியல் பூங்காவை காண ஆர்வம்

நீலகிரி மாவட்டம் உதகையில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வரும் நிலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை ஆர்வமாக கண்டு ரசித்து வருகின்றனர்.



நீலகிரி: தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முக்கிய சுற்றுலா தளமான உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக கர்நாடகா, கேரளா மாநிலங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகையின் காரணமாக உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான படகு நிலையம், தாவரவியல் பூங்கா, பைக்காரா, Seventh Mile, தொட்டபெட்டா ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டி வருகிறது.



காலை வேளைகளிலேயே நிலவும் மூடு பனி மற்றும் சாரல் மழையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், உதகை ஒரு மினி காஷ்மீர் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பரந்த புல்வெளிகள் நிறைந்த உதகை தாவரவியல் மற்றும் ரோஜா பூங்காவை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.



தற்போது நீலகிரி மாவட்டத்தில் சீசன் டைம் என்றாலும், கடும் மூடுபனி, அவ்வப்போது மழை அதனுடன் கடும் குளிர் நிலவி வருவதால், பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வரவு சற்று குறைவாகவே இருக்கும்.

பொதுவாக இந்த சீசனில், கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தான் அதிகம் இந்த கடும் குளிரான சீதோஷ்ண நிலையை ரசிக்க அதிகம் வருவார்கள் என்று தாவரவியல் பூங்கா அருகே கேரட், மக்காச்சோளம் கடலை ஆகிய உணவு பொருட்களை விற்று வரும் சாலையோர வியாபாரிகள் கூறுகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி, உதகையில், அதிகப்படியான 22.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சமாக 12.3°C பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் 10 டிகிரிக்கும் கீழே குளிர் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...