கோவை சிங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு

நீலிகோணாம்பாளையம் நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 24 ஆம் தேதி குடும்பத்துடன் கோவை வந்த ரமேஷ், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.



இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் அருகே வசித்து வரும் மகேஷ்வரி என்ற பெண், ரமேஷின் வீட்டுக்கே சென்று பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, ரமேஷூக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து கிளம்பி வந்த ரமேஷ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து

சிங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.



இதையடுத்து, கோவை விரைந்த ரமேஷ், வீட்டுக்குள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சுமார் 36 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.



இதையடுத்து, தடயவியல் துறையினர் அங்கு பதிவான 6 கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், 36 சவரன் தங்க நகைகளுடன் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...