கோவையில் குட்டையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி..!

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒன்னிபாளையம் பகுதியில் குட்டையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சதீஷ்குமார் என்ற கல்லூரி மாணவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை இடிகரையைச் சேர்ந்தவர் அமுதா. இவரது 17 வயது மகன் சதீஷ்குமார் இவர் இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று நண்பர்கள் 2 பேருடன் ஒன்னிபாளையம் பகுதியில் உள்ள குட்டைக்குச் சென்று குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் இருந்த சேற்றில் சிக்கி சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...