கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி முகாம் நிறைவு

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வந்த மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான 15 நாள் வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாநகர காவல் ஆணையர் கலந்துகொண்டு பயிற்சி காவலர்களை பாராட்டினார்.



கோவை: தமிழகம் முழுவதும் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.



15 நாட்கள் நடைபெறும் இந்த பயற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல், லத்தி, கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலகக் கூட்டத்தை கலைத்தல், அணி வகுப்பு கவாத்து, கைதி வழிக்காவல் பணி, பண வழிகாவல் பணி, காப்புபணி, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணி ஆகிய பணியின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, மன அழுத்தம் கையாளுதல், உடல் நலம் பேணுதல், ஆரோக்கிய உணவு முறை, ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.



இந்த பயிற்சியின் நிறைவு விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பயிற்சி முடித்த காவலர்களின் கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



இதையடுத்து மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதபடை துணை ஆணையர் முரளிதரன், உதவி ஆணையர் சேகர், ஆய்வாளர்கள் கோவிந்தராஜூ, பிரதாப்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...