உதகை அருகே காட்டு யானை தாக்கியதில் குரும்பர் இன ஆதிவாசி ஒருவர் பலியான சோகம்

உதகை அருகேயுள்ள மாவனல்லா கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாவனல்லா கிராமத்தை சேர்ந்தவர் மாதன் (55). குரும்பர் இன ஆதிவாசியான இவர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க மசினகுடிக்கு சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு மாவனல்லாவில் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டுயானை ஒன்று மாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. மாதனின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, யானை தாக்கியதில் மாதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.



உடனடியாக அவரை மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாதனின் உடல் பிரேத பரிசோதனைகாக உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

மாவனல்லா பகுதியில் சுற்றித் திரியும் இந்த ஒற்றை காட்டு யானை ஏற்கனவே இரண்டு பேரை தாக்கி கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...