தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டி - வெண்கல பதக்கம் வென்ற மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவிகள், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சைக்கிள் போலோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இளையோர் பெண்களுக்கான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த சட்டீஸ்கர் மாநிலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.



அதேபோல், இரண்டாவதாக வந்த மேற்கு வங்க மாநிலம் வெள்ளி பதக்கத்தை வென்ற நிலையில், தமிழ்நாடு வெண்கல பதக்கத்தை வென்றது. இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், பதக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...