பொங்கலுக்கு மோதும் துணிவு - வாரிசு :கோவையில் அதிக தியேட்டர்கள் அதிக தியேட்டர்கள் யாருக்கு..?

பொங்கல் பண்டிகையையொட்டி அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், கோவையில் உள்ள 162 தியேட்டர்களில் 10 தெலுங்கு படத்திற்கும், மீதமுள்ள 152 தியேட்டர்கள் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்.


Coimbatore: தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் திமுக - அதிமுக போன்ற இருதுருவ நகர்வு சினிவாமையும் விட்டுவைக்கவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. பொதுவாக திரையுலகில் சமகால போட்டியாளர்களாக பலர் உலா வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமா அதற்கு விதி விலக்கு.

குறிப்பாக கடந்த 4 தலைமுறைகளாக இருதுருவ போட்டி என்பது பரவலாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்களான சின்னப்பா - பாகவதர் காலத்தில் ஆரம்பித்து மக்கள் திலகம் எம் ஜி ஆர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - உலக நாயகன் கமலஹாசன், தல அஜித் - தளபதி விஜய் என்று இந்த இருதுருவ நகர்வு தொடர்ந்து வருகிறது.

அடிப்படையில் இவர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்றாலும் தொழில் ரீதியாக கடும் போட்டியாளர்களாகவே கருதப்படுகின்றனர். தற்போதைய தலைமுறையில் தலையா ? தளபதியா ? என்ற போட்டி தமிழ் சினிமாவில் தழைத்தோங்கி இருக்கிறது.

அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் தனித்தனியாக வெளியாகும்போதே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு பற்றிக்கொள்ளும். இந்த நிலையில் ஒரே நாளில் இருவரது படங்கள் வெளியானால் சொல்லவா வேண்டும்.

டுவிட்டர், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸப் என இருவரின் ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஸ்டேட்டஸ் போட காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் அஜித், விஜய் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலை விழாவை முன்னிட்டு அஜித் நடிப்பில் வீரம், விஜய் - மோகன்லால் நடிப்பில் ஜில்லா படங்கள் வெளியாகின. இருபடங்களும் தனிப்பட்ட ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் ஈர்க்க செய்திருந்தன. நல்ல விமர்சனங்களுடன் வசூலை வாரி குவித்தன.

இந்த நிலையில் அதே பொங்கல் நாளன்று இயக்குநர் வினோத் இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கைகோர்த்த தலயின் துணிவு படமும், முதன் முறையாக இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் தளபதியின் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களும் வழக்கத்தை விட கூடுதலான எதிர்பார்ப்பை எகிர செய்திருக்கின்றன.

துணிவு திரைப்படத்தை ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் வெளியிடும் நிலையில் அதிக திரையரங்குகள் துணிவுக்கே ஒதுக்கீடு செய்வதாக வதந்தி உலா வருகின்றன. இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் சங்க முக்கிய பிரதிநிதி ஒருவரை சிம்பிளி சிட்டி தொடர்புகொண்டு பேசியது.

அதனடிப்படையில் துணிவு, வாரிசு திரைபடங்களுக்கான தியேட்டர் பங்கீடு குறித்து தெரிய வந்திருக்கின்றன. கோயமுத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியவாறு மொத்தமாக 162 தியேட்டர்கள் இருக்கின்றன. இதில் 10 திரையரங்குகள் பொங்களுக்கு வெளியாகும் தெலுங்கு படத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மீதமுள்ள 152 திரையரங்குகள் துணிவு திரைப்படத்துக்கும், வாரிசு திரைப்படத்துக்கும் ஒதுக்கப்படுகின்றன.

இரண்டு நடிகர்களும் அதிக ரசிகர்கள் பட்டாளத்துடன் இரு துருவங்களாக தனிப்பெரும் போட்டியாளர்களாக போற்றப்படுகின்றனர். இந்த நிலையில் இருவருக்கும் சமமான திரையரங்குகளை ஒதுக்க திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரசிகர்கள் பட்டாளத்தின் அடிப்படையிலும், வசூல் அடிப்படையிலும் நம்பர் 1 என்ற இடத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. நல்ல கதை கொண்ட படமே வெற்றி வாகை சூடுகின்றன.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகும் படங்களில் கதை ஈர்க்கும்படி இல்லை என்றால் அந்த படம் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. அதே சிறு நடிகர் பட்டாளத்துடன் வெளியாகும் படத்தின் கதை ஈர்க்கப்பட்டால் சின்ன நடிகர் பட்டாளத்தின் படமே வெற்றி படமாக அமைந்திருக்கின்றன என்பது திரை வரலாறு.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 என்ற இடம் சிறந்த கதைக்கே என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில் இந்த பொங்கலை எதிர்கொள்ள தனது வாரிசான ரசிகர்களை நம்பி துணிவும் , ரசிகர்கள் இருக்கும் துணிவில் வாரிசும் திரையரங்கை திருவிழாக்கோலமாக மாற்ற தயாராகி வருவதே எதார்த்தம்...

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...