கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் அகற்றம் - பரபரப்பு

கோவை குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் பெயர் பலகையில் இருந்த எஸ்.பி.வேலுமணியின் பெயர் அகற்றப்பட்டுள்ளது தொடர்பாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியால் திறந்து வைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் எஸ்.பி.வேலுமணியின் பெயர் பொறிக்கப்பட்ட இடம் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, 90வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷ், பகுதி கழக செயலாளர்கள், குலசேகரன், மற்றும் மதனகோபால் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளரிடம் உடனடியாக பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் எழுத்துப்பூர்வமாக அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதனை திமுகவினர் யாரேனும் தான் செய்திருக்க கூடும் என அதிமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது சட்டமன்ற தொகுதியில் திறந்து வைத்த பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது என்றாலும் தற்போது திமுக ஆட்சியிலும் அவரே அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இவ்வாறு இருக்க இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை செய்தவர்கள் யார் என அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...