கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: கோவையை சேர்ந்த மேலும் இருவர் கைது - என்.ஐ.ஏ அதிகாரிகள் நடவடிக்கை….!

கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அல் அமீன் காலனியை சேர்ந்த சேக் இதாயத்துல்லா மற்றும் வின்சன் ரோடு பகுதியை சேர்ந்த சனோபர் அலி ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாக மேலும் உமர் பாரூக், பெராஸ்கான் உள்பட 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கைதான 9 பேரில் முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடந்தி வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை அடிப்படையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு முக்கியமான நபர்களான கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த சேக் இதாயத்துல்லா மற்றும் வின்சன் ரோடு பகுதியை சேர்ந்த சனோபர் அலி ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உமர் பாரூக் தலைமையில் சத்தியமங்கலம் அசனூர், கடம்பூர் வனப்பகுதியில் கடந்த பிப்ரவரியில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதில், கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின், முகமது அசாருதீன், சேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் சதி திட்டம் தீட்டத்தை அரங்கேற்ற ஆலோசனை செய்தது என்.ஐ ஏ விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து, இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கோவை கார் வெடிப்பு வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...