கோவையில் கட்டிட நிறுவன ஒப்பந்ததாரரை காரில் கடத்தி ரூ.5 லட்சம் பறிப்பு - பெண் உள்பட 3 பேர் கைது….!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு தொடர்ந்து இழுத்தடித்து வந்தால், அவரை கடத்தி பணத்தை திரும்ப பெற்றதாக கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் அனீஸ் கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன் (42). தனியார் கட்டுமான ஒப்பந்ததாரர். இவரது மனைவி மகேஸ்வரி சொந்தமாக பிரின்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 25 ஆம் தேதி மணிகண்டன் கோவைப்புதூர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம், ஒரு பெண் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் மணிகண்டன் பற்றி விசாரித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

உடனே, மகேஸ்வரி திருமணத்துக்கு சென்று இருந்த தனது கணவர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மணிகண்டன் வீட்டுக்கு வந்ததும், அந்த பெண் செல்போனில் பேசி விட்டு, மணிகண்டன் மற்றும் அவரது மனைவியின் செல்போனை பறித்து சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

பின்னர், 5 பேரும் சேர்ந்து மணிகண்டனை கட்டாயப்படுத்தி ஒரு காரில் ஏற்றிக்கொண்டு, காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள ஒரு விடுதியில் அடைத்து வைத்தனர். அங்கு அவரை அடித்து உதைத்து மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளனர்.

பின்னர் மணிகண்டன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.

மேலும், பத்திரத்தில் ரூ.15 லட்சத்திற்கு மணிகண்டனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவரை விடுவித்தனர்.

இதுகுறித்து, மணிகண்டன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வனிதா என்ற பெண் 4 பேருடன் சேர்ந்து மணிகண்டனை காரில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், மணிகண்டனை கடத்தி பணம் பறித்த மதுக்கரையை சேர்ந்த வனிதா, சீர்காழியை சேர்ந்த முருகன், முருகனின் உறவினர் ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான, முருகன் கிணத்துக்கடவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், முருகனின் உறவினர்களுக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மணிகண்டன் பல லட்சம் பணத்தை பெற்றுள்ளார் என்றும் நீண்ட நாட்கள் ஆகியும் அரசு வேலை வாங்கி தராதது குறித்து கேட்கும் போதெல்லாம் மணிகண்டன் இழுத்தடித்து வந்தால், அவரை கடத்தி பணத்தை பறித்தோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்த வழக்கில், முக்கிய திருப்புமுனையாக இவர்களது வாக்குமூலம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...