கோவையில் இடம் வாங்கி வீட்டுமனை கட்டி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த தம்பதிகள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்…!

மீனா எஸ்டேட் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த தம்பதிகள், இடம் வாங்கி வீடு கட்டித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வழக்கில் சிறையில் உள்ள நிலையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: கோவை ராமநாதபுரம் மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாத் சிங் (41), இவரது மனைவி கலைவாணி (38). இருவரும், கியூப் ஸ்கோயர் கன்ஸ்ட்ரெக்சன் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.

இடம் வாங்கி வீடி கட்டி தருவதாக கூறி கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலரிடம், à®ªà®² லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தனர். இது குறித்து புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஜெகநாத் சிங்கை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது அவர்கள் மேலும பலரை ஏமாற்றியதும், முன் பணமாக ரூ.20 லட்சம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே, ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரில், இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

ஏற்கனவே, சிறையில் உள்ள இருவருக்கும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆணை நகலை காவலர்கள் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...