கோவை கரும்புக்கடை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 83 கிலோ குட்கா பறிமுதல்….!

சாரமேடு, ராயல் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 83 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. குனியமுத்தூர் போலீசார் அவரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை கரும்புக்கடை பகுதியில் வீட்டில் வைத்து குட்கா விற்பனை நடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் கரும்புக்கடை, சாரைமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சாரமேடு, ராயல் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 83 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...