வீடு கட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி - தாராபுரம் இளைஞர் கைது செய்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்ட தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.


கோவை: திருப்பூர் மாவட்டர் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (35). இவர், குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக தனது யுடியூப் பக்கத்தில் பல்வேறு விளம்பரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விளம்பரங்களை நம்பிய கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த ஆஷா என்ற பெண் அவரை தொடர்பு கொண்டு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்டித் தரும்படி கூறி, முன் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை உதயகுமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உதயகுமார் செட்டிபாளையத்தில் உள்ள ஆஷாவின் காலி இடத்தில் வீடு கட்டித் தருவதற்கான முதற்கட்ட வேலைகளை மட்டும் செய்துவிட்டு, வீட்டை கட்டி முடிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது சம்மந்தமாக, பாதிக்கபட்ட பெண் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் பொள்ளாச்சி, கோமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இதேபோல் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதயகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...